ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த செல்லூர் ராஜூ

 
tt tt

ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜூ பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

rahul gandhi
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின், கமல் ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

sellur raju

 இந்நிலையில் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்த போது, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு; ராகுல்காந்தி விடா முயற்சியால் காங்கிரஸை கட்டிக் காக்க முயற்சிக்கிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் ராகுலை புகழ்ந்து வீடியோ பதிவிட்ட செல்லூர் ராஜூ அதனை நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது