'இனிமே பெருங்களத்தூர ஈஸியா தாண்டிறலாம்'... திறக்கப்பட்டது பெருங்களத்தூர் மேம்பாலம்!

 
மேம்பாலம்

பெருங்களத்தூர் ரவுண்டானவுடன் கூடிய மேம்பாலம் 3ம் கட்ட பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து இன்று திறக்கப்பட்டது.

தென் மாவட்டங்களில்   சென்னையுடன் இனைக்கும்  பகுதியாக உள்ள பெருங்களத்தூர்  திகழ்கிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும், அதுபோல் சென்னைக்கு நுழைவாயிலாக உள்ள தாம்பரத்தை அடைய  இந்த பெருங்களத்தூரை நாள்தோரும் பல ஆயிரம் வாகனங்கள்  கடக்க வேண்டும். அதே நேரத்தில் சென்னையின் புறநகரில் வசிப்பவர்களும் நாள்தோரூம் பள்ளி, கல்லூரி, கம்பெணிகள், அலுவலகங்களுக்கு இவ்வழியே செல்கிறார்கள், அரசு பேரூந்துகள், தனியார் வாகனங்கள், இருசக்கர வாகங்கள் என நிமிடத்திற்கு நிமிடம் வாகனங்கள் கடக்கும் அதனால் நாள்தோரும் கடும் வாகன நெரிசல்  ஏற்படும் பகுதியாக  பெருங்களத்தூர்  திகழ்ந்தது. ஆனால் இந்த ஊரின் பெயரை பொங்கல், தீபாவளி, தொடர் விடுமுறை  வார விடுமுறை நாட்களில் கேட்டால் பெருங்களத்தூரை கடப்பதற்கே 3 மணி நேரம் ஆகுமே என்கிற அச்சம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக 2020-ல் தமிழக அரசு ரூ.234 கோடியில் புதிய ரவுண்டனாவுடன் கூடிய மேம்பாலம் அமைக்க திட்டமிட்டது. ஆனால் கொரோனா தொற்று பணியாட்கள் இல்லை, நிலம் கையக படுத்துவதில் தமதம்  பல கராணங்களால்  பெருங்களத்தூர் ரவுண்டனவுடன் கூடிய பாலம் அமைப்பதில் தொய்வு ஏற்பட்டது,


அதன் பின்னர் 2021ல் புதிய ஆட்சி அமைந்தது, கொரோனா தொற்றும் கட்டுக்குள் வந்த நிலையில் பணிகள் தூரிதப்படுத்தப்பட்டு வண்டலூரில் இருந்து தாம்பரம் மார்கமாக செல்லும் ஒரு பகுதி பணிகள் நிறைவடைந்து 2022ம் ஆண்டு செப்டம்பரில் திறக்கப்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நுழையும் வாகன போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது. அதனையடுத்து அதே மார்கத்தில் இடதுபுறம் ரெயில்வே மேம்பாலம் இணைப்பு நிறைவு சீனிவாச நகர் செல்லும் பகுதி 2023ம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. அதனால் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரமுடியும். ஆனால் அதே பகுதிக்கு செல்ல வண்டலூர், முடிச்சூர் சென்றால் மட்டும் வீடு திரும்ப முடியும் என்கிற நிலை நீடித்தது. இதனிடையே தாம்பரம்-வண்டலூர் மார்கத்தில் கான்கீட் தூண்கள் அமைக்கும் பணியும் நடைபெற்ற நிலையில்  தமிழக அரசு நெடுஞ்சாலை துறையில் பணியை வேகப்படுத்தினார்கள். ரவுண்டனா பகுதி, தாம்பரம்-வண்டலூர் செல்லும் பகுதி, நெடுங்குன்றம் சாலையில் இறக்க ஏற்ற பகுதி என மிக வேகமாக பணிகள் நடைபெற்றது. இதில் தாம்பரம்-வண்டலூர் மார்கமாக மேம்பால பணியும், அதுபோல் மேம்பாலத்தில் ரவுண்டனா பகுதியும்  ஒரு மாதம் முன்பே நிறைப்பெற்றன. இதனால் பெருங்களத்தூர் ரவுண்டானவுடன் கூடிய மேம்பாலம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.