மதுரை ஆதின மடத்தின் இளைய பீடாதிபதியாக நித்தியானந்தாவை அறிவிக்கக் கோரி மனு- ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 
என்னை அவர்கள் கொல்ல பார்க்கின்றனர்! பீதியை கிளப்பும் நித்தியானந்தா! 

மதுரை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை ஏற்றதற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஆதீன மடத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி காலமானார். இதை தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் மறைவால் 293 வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது மதுரை ஆதின பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நித்தியானந்தா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2012ம் ஆண்டு தன்னை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை சந்தித்த நிலையில், 2019ம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றது. இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி காலமானார். முறைபடி அவருக்கு பின் நான் தான் மதுரை ஆதினமாக முறைபடி பொறுப்பேற்க வேண்டும்.

madurai high court

ஆனால்,தற்போது எந்த வித ஒப்பந்தமோ,உயிலோ இல்லாமல், மதுரை ஆதினம் அருணகிரி நாதர் மறைவுக்கு பிறகு,293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது ஏற்புடையது அல்ல.  இந்த நிலையில்   கடந்த 2012ம் ஆண்டு தன்னை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார்.பின்னர் மறுத்தார். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது விதிமீறல், இந்த நிலையில் மதுரை ஆதினம் அருணகிரி நாதருக்கு  பதிலாக, 293 வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இந்த வழக்கில் மதுரை நீதிமன்றம் சேர்த்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய  மறு ஆய்வு வேண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து, தற்போதைய மதுரை ஆதினம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.