எஸ்.ஜி.சூர்யா ஜாமினை ரத்து செய்யக்கோரி மனு - நாளை விசாரணை

 
tn

தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி சென்னை தி நகரில் கைது செய்யப்பட்டார்.  மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பற்றி ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அளித்த புகாரில் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்ட நிலையில் இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜூலை 1 வரை நீதிமன்ற காவல் வழங்கி மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஜூன் 20ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சூர்யா தரப்பு வழக்கறிஞர் ஜாமின் மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த மதுரை நிதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பானு , எஸ்.ஜி.சூர்யாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய சைபர் கிரைம் போலீசாரின் மனு தள்ளுபடி செய்து, நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. 

tn

இதையடுத்து அவதூறு வழக்கில் கைதாகி ஜாமின் பெற்ற நிலையில், நிபந்தனைகளை மீறி மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திடாத நிலையில், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை  விசாரிக்க போலீசார் தேடி வருகின்றனர்.

madurai high court

இந்நிலையில் அவதூறு வழக்கில் கைதாகி ஜாமின் பெற்ற பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா, நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதால் ஜாமினை ரத்து செய்யக்கோரி மதுரை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அம்மனு மீதான  விசாரணை நாளை நடைபெறுகிறது.  30 நாட்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்த நிலையில், கடந்த 2ம் தேதியில் இருந்து அவர் கையெழுத்து இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.