கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! சென்னையில் பரபரப்பு

 
அ அ

சென்னை கிண்டியில் கட்டிட பொறியாளர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கிண்டி, ஈஸ்வரி ரத்தினம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராம் நித்திஷ்(26.) தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணி புரியும் இவரது கார் நேற்று அதிகாலை,  தீப் பற்றி எரிந்தது. அடுத்து நித்திஷ் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்  உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். 

இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இது குறித்து அவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் கிண்டி போலீசார், புகாரைப் பெற்று அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் கிண்டி, மடுவாங்கரையை சேர்ந்த விஜய பிரபாகரன்(25) என்பவர் பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து காரில் வீசியது தெரிந்தது இதனை அடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது மது போதைக்கு அடிமையான இவர், இரண்டு முறை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். மனநலம் பாதித்ததாக கூறுப்படுகிறது. போலீசார் இவரை பிடித்து, எதற்காக பெட்ரோல் குண்டு வீசினாய்  என வி விசாரித்து வருகின்றனர்.