திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

 
Tn Tn

நெல்லையில் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

நெல்லை முன்னீர்பள்ளத்தில் வசித்து வருபவர் செல்வசங்கர். இவர் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், நள்ளிரவில் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீச்சில் செல்வசங்கர் வீட்டில் இருந்த கார் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக வீட்டில் இருந்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், பெட்ரோல் குண்டு வீசியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக செல்வசங்கர் தரப்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.