சென்னையில் 36 நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல், டீசல்...

 
ஜிஎஸ்டிக்குள் வருகிறதா பெட்ரோல், டீசல்? – செப்.17ஆம் தேதி முடிவு?

சென்னையில் 36 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

ஒரு காலத்தில் ஆடம்பர செலவாக பார்க்கப்பட்ட பெட்ரோல் , டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் இன்று அத்தியாவசிய பொருட்களின் பட்டியலுக்கு வந்துவிட்டன.. அதே நேரம் பெட்ரோல், டீசல் விலையோ நாளுக்கு நாள் அதிகரித்து, கதிகலங்கச் செய்யும்.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சர்வதேச் சந்தையில் நிலவும், கச்சா எண்ணெயின் விலை , டாலருக்கு ந்நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி  செலவு ஆகியவற்றை  அடிப்படையாகக் கொண்டு  எண்னெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

பெட்ரோல், டீசல்

இந்நிலையில் கடந்த மாதம் 3 ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்து அறிவித்தது. அதன்பிறகு தற்போது வரை ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி இருந்து வருகிறது.  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும்,  டீசல்  ஒரு லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.