பெண் சிறைவாசிகள் நிர்வகிக்கும் பெட்ரோல் பங்க் .. ரூ. 29 கோடி லாபம்

 
tn

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்விற்கென கல்வி. திறன் மேம்பாடு தொழிற்கல்வி, தொழிற்கூட பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் சிறை வளாகங்களில் சிறை அங்காடிகள் தொடங்கிட அரசால் அனுமதி வழங்கப்பட்டு. அதில் சிறைவாசிகளால் தயார் செய்யப்படும் தோல் காலணிகள், தோல் பெல்ட், சலவை/குளியல் சோப், மழை கோட், ஆண்/பெண் ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், நோட் புக். பூச் செடிகள், மண்புழு உரம், காய்கறிகள், செக்கு எண்ணெய்கள், அடுமனைப் பொருட்கள், ஓவியங்கள் போன்றவை சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்பட்டு "ப்ரீடம்" (Freedom) என்ற பெயரில் சிறை அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இச்செயல்பாடுகள் மூலம் சிறைவாசிகள் தினசரி ஊதியம் மற்றும் லாபத்தில் ஒரு பங்குத் தொகையும் பெற்று வருகிறார்கள்.

madurai prison

சிறை அங்காடிகளின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக மத்திய சிறை, புழல், வேலூர், கோயம்புத்தூர், பாளையங்கோட்டை மற்றும் பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகிய 5 சிறை வளாகத்தில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு சிறைத்துறையால் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து நடத்த அரசால் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு, இந்த பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் "ப்ரீடம் ஃபில்லிங் ஸ்டேசன்" (Freedom Filling Station) என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

prison1

31.03.2023 வரை அனைத்து ப்ரீடம் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களின் மொத்த விற்பனை ரூ.847.31 கோடி, இலாபம் ரூ.23.94 கோடி மற்றும் சிறைவாசிகளின் ஊதியம் ரூ.2.37 கோடி மற்றும் புழல் ப்ரீடம் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தின் 31.03.2023 வரையிலான மொத்த விற்பனை ரூ.218.23 கோடி, மொத்த இலாபம் ரூ.5.64 கோடி மற்றும் சிறைவாசிகளின் ஊதியம் ரூ.45.83 இலட்சம் ஆகும்.அதன்படி பெண் சிறைவாசிகள் நிர்வகிக்கும் பெட்ரோல் பங்க்கில் ரூ. 29 கோடி லாபம் கிடைத்துள்ளது.