தமிழ்நாட்டில் முதன்முறையாக உடற்கல்வி படப்புத்தகம் அறிமுகம்.!!

 
tn govt tn govt


தமிழ்நாட்டில் முதல்முறையாக 6 -10ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடப்புத்தகம் அறிமுகப்படுத்தப்படுகிறது.  

அனைத்து பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உயர்கல்வி புத்தகம் அறிமுகப்படுத்தப்படுகிறது.  மாணவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த புத்தகம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 700க்கும் குறைவாக இருந்தால் ஒரு உடற்கல்வி ஆசிரியரும், 700க்கும் மேல் மாணவர்கள் இருந்தால் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.  ஒவ்வொரு பள்ளியிலும் உடற்கல்வி ஆசிரியர்களும், உடற்கல்வி பாட வேளைகள் இருந்தாலும் அதற்கான பிரத்யேக படத்திட்டம் இதுவரை உருவாக்கப்படாமல் இருந்தது.  பொதுவாக பிள்ளைகளை விளையாட வைப்பது, உடற்கல்வி தேர்வுகள் இருப்பதால்,  ஒவ்வொரு விளையாட்டிலும் எத்தனை வீரர்கள் இடம்பெறுவார்கள், எப்படி விளையாடுவார்கள் என்பது போன்ற பொதுவான விஷயங்கள் மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தன.  

இதனால் உடற்கல்வி பாடத்தை அனைத்து மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாகவும்,  மாணவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டும் உடற்கல்வி பாடப்புத்தகத்தை நடப்புக் கல்வியாண்டிலேயே  கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வந்தது. அதன்படியே உடற்கல்வி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுள்ளது. இது வரும் கல்வியாண்டில் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.