பேருந்து கட்டணத்தை உயர்த்த திட்டமா?- போக்குவரத்து துறை விளக்கம்
தமிழகத்தில் பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் எந்த கருத்துருவும் இல்லை என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது என்றும் அப்படி முடிவு செய்து இருந்தால் அதனை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்,பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் தமிழ்நாடு அரசிடம் இல்லை எனவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.