தொழில்நுட்பக் கோளாறு- 2 மணிநேரமாக வானத்தில் வட்டமடிக்கும் விமானம்! திருச்சியில் பரபரப்பு

 
புதுக்கோட்டை அன்னவாசல், சுற்றுவட்டாரப் வான் பகுதியில் தென்பட்ட விமானம், அப்பகுதியில் வட்டமடித்துவருகிறது.

திருச்சியிலிருந்து ஷார்ஜா செல்ல வேண்டிய Air India express 🇮🇳 விமானம் இயந்திர கோளாறு காரணமாக (16 முறை) வட்டமிட்டு கொண்டிருக்கின்றன.

Image

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணி நேரமாக விமானம் வானத்தில் வட்டமிட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. விமானத்தை மீண்டும் தரையிறக்கும் முயற்சியில் விமானிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் விமானத்தை தரையிரக்குவதில் சிக்கல் இருப்பதால் 2 மணி நேரமாக வானில் வட்டமடித்து வருகிறது. புதுக்கோட்டை அன்னவாசல், சுற்றுவட்டாரப் வான் பகுதியில் தென்பட்ட விமானம், அப்பகுதியில் வட்டமடித்துவருகிறது. இந்த விமானத்தில் 141 பயணிகள் உள்ளனர். 

விமான நிலையத்திற்கு வெளியே 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினியும் விமான நிலையம் விரைந்தார். எரிபொருளை குறைத்து விமானத்தை எமர்ஜெர்ன்சி லேண்டிங் செய்ய குறைந்தது 4 மணிநேரம் ஆகலாம் என்றும், எமர்ஜென்சி லேண்டிங்கின்போது விமானம் சற்று அதிர்வுகளுடன் தரையிறங்கும் என்றும் விமானப்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.