பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

 
பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..   பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..  


 பெங்களூருவில் இன்று மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 கர்நாடக மாநிலம் தலைநகர் பெங்களூரில்  ஊதா மற்றும் பச்சை தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து  மூன்றாவதாக மஞ்சள் தடம் அமைக்கப்பட்டு மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.  அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக  நடைபெற்று வரும் நிலையில்,   இன்று 3 வந்தேபாரத் ரயில் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில்  பிரதமர் நரேந்திர மோடி மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.  

பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..  

பெங்களூருவிலிருந்து பெலகாவி, அமிர்தசரஸ் முதல் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) முதல் புனே வரை இந்த ரயில்கள் செல்லும் என கூறப்படுகிறது. இதில் மஞ்சள் தட மெட்ரொ ரயில் மட்டும் நேரடியாக தொடங்கி வைக்கப்பட்ட நிலையில்,  தவிர, மற்றவை இரண்டும் காணொளி வாயிலாக தொடங்கப்பட்டன. இந்த அதிவேக வந்தேபாரத்  ரயில்கள் பயண நேரத்தைக் குறைப்பதுடன், பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவமால இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன்  பல ஆண்டுகளுக்குப் பிறகு, பெங்களூருவில் மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் ரூ.7,160 கோடி மதிப்பில் 16 நிலையங்களை கொண்டு, 19 கி.மீட்டருக்கும் நீளத்திற்கு இந்த மஞ்சள் பாதை திறக்கப்பட்டுள்ளது.