“சும்மா ஜப்பான் புல்லட் ரயில் மாதிரி 12 வந்தே பாரத் ரயில் தந்தவர் மோடி”- நயினார் நாகேந்திரன்

 
சும்மா ஜப்பான் புல்லட் ரயில் மாதிரி 12 வந்தே பாரத் ரயில் தந்தவர் மோடி- நயினார் நாகேந்திரன் சும்மா ஜப்பான் புல்லட் ரயில் மாதிரி 12 வந்தே பாரத் ரயில் தந்தவர் மோடி- நயினார் நாகேந்திரன்

சிங்காரச் சென்னையை உருவாக்குவோம் என்று சொன்னார்கள், இன்று சீரழிந்து சென்னையாக இருக்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேர்  பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “சிங்காரச் சென்னையை உருவாக்குவோம் என்று சொன்னார்கள் இன்று சீரழிந்து சென்னையாக இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொன்னது ஒன்று, இப்பொழுது நடந்து கொள்வது ஒன்றாக உள்ளது. எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம், போதை, கஞ்சா விற்பனை பள்ளிகள் மட்டுமல்லாது கல்லூரிகளில் அருகிலேயே விற்பனை அதிகமாகியுள்ளது. சென்னையில் பெரிய பெரிய ஹோட்டல்களில் மெத்தமட்டமீன் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் குழந்தைக்கு எதிரான குற்றங்கள் 15% உயர்ந்துள்ளது. போக்சோ குற்றம் 52 சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றம் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்த குற்றங்கள் அனைத்தையும் செய்வது திமுக பின்னணியில் உள்ளவர்கள் செய்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர், அமைச்சருடன் நெருங்கி பழகியவர்‌. 

திமுக சமூக நீதி என்று பேசுகிறார்கள் எங்கே சமூக நீதி இருக்கிறத ? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்வோம் என்று கூறினார்கள் ஆனால் என்ன செய்தார்கள். நீதிமன்ற உத்தரவு என்று கூறி அவர்களை படாதபாடு படுத்தி விட்டார்கள். இன்று மதியம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். அவருடைய கருத்துக்களை வைத்து பார்த்தால் 157 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெறும். இதே கருத்துக்கணிப்பை முதலமைச்சரின் மருமகன் வைத்துள்ளார். அந்த கருத்துக்கணிப்பில் திமுக 90 இடங்களுக்கு கீழே சென்று கொண்டிருக்கிறது. இன்று கூட ராஜரத்தினம் மைதானம் வெளியே ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆசிரியர்கள், துப்புரவு தொழிலாளிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் போராட்டம், உண்ணாவிரதத்தில் உள்ளார்கள். மிக மோசமான அளவிற்கு ஒட்டுமொத்த பொதுமக்கள் மட்டுமல்லாது அரசு ஊழியர்களின் மிகப்பெரிய எதிர்ப்பை இந்த அரசு சம்பாதித்து வருகிறது. திமுகவினர் 17 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. திமுக அமைச்சர்கள் எவ்வளவு பேர் சிறை போவார்கள் என்று தெரியாது அவ்வளவு ஊழல் செய்துள்ளார்கள். ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறார் என்றார். ஆனால் இப்போது தமிழக மக்கள் எல்லாம் நீச்சல் தான் அடிக்கப் போகிறார்கள். 

மத்திய அரசு என்ன தந்தது என்று கேட்கிறார்கள். 14 லட்சத்து 83 கோடி மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு வழங்கி உள்ளது. தமிழகத்தில் 12 வந்தே பாரத் ரயில் இயங்குகிறது. ஜப்பான் புல்லட் ரயில் போல் வந்தே பாரத் ரயில் இயங்குகிறது. தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரி தந்தது பிரதமர் நரேந்திர மோடி. பெற்று தந்தது யார் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இதை யாராலும் மறுக்க முடியுமா? ஆனால் இதுவரை திமுக ஒரு மருத்துவக் கல்லூரியையாவது கொண்டு வந்து உள்ளீர்களா? ஒரு பக்கம் ஸ்டாலின் குடும்பம் கோவிலுக்கு செல்கிறது, இன்னொரு பக்கம் இந்துக்களுக்கு எதிராக பேசுகிறார்கள். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை. இன்று இங்கு தீபம் ஏற்றியுள்ளோம், திருப்பரங்குன்றத்தில் ஒரு திருப்பம் ஏற்படப்போகிறது. திருப்பதி சென்றால் திருப்பம் ஏற்படும் என்று கூறுவார்கள், இன்று திருப்பரங்குன்றத்தால் திமுக ஆட்சியில் திருப்பம் ஏற்பட போகிறது. முன்னாள் முதல்வர் ஜானகி மறைந்த போது அவருக்கு மெரினா கடற்கரையில் இடம் வேண்டுமென்று கேட்டபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை மறுத்துவிட்டார். ஆனால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்த பொழுது மெரினா கடற்கரையில் இடம் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து இடம் வழங்கினார். 

தமிழக வெற்றிக்கழக தலைவர் கருரூக்கு சென்றார். நிகழ்ச்சியில் அவர் 12 மணிக்கு வர வேண்டியதாக இருந்து. ஆனால் மாலை 7 மணிக்கு வந்தார். அவர் வந்த உடனே மைக்கை எடுத்து பத்து ரூபாய் பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டிலுக்குனு ஒரு பாட்டை படித்தார். டாஸ்மார்க்கில் பகலில் பத்து ரூபாயும் இரவில் இருபது ரூபாயும் வாங்குகிறார்கள். விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே மின்சார துண்டிக்கப்படுகிறது, அவர் மீது செருப்பை வீசுகிறார்கள். உடனடியாக அங்கு தள்ளும் முள்ளு உருவாகிறது. இதனால் 10 வயது, மூன்று வயது குழந்தைகள் நசுக்கி இறந்தார்கள். தமிழக வெற்றிக் கழகம் கேட்ட இடத்தை கொடுத்திருந்தால் 41 உயிர் இறந்து போயிருக்காது. சம்பவம் நடந்த பத்து நிமிடத்தில் முதலமைச்சர் கரூருக்கு புறப்பட்டு செல்கிறார். இதனை திட்டமிட்டு செய்தார்களா? என்று தெரியவில்லை. அன்று இரவே இறந்தவர்களின் உடலை உடற்கூறாய்வு செய்கிறார்கள். இது யாரை காப்பாற்றுவதற்கு செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்காகவா? இது அனைத்திற்கும் முழுக்க முழுக்க காரணம் திமுக தான். கரூர் சென்ற முதலமைச்சர் கள்ளக்குறிச்சி செல்லவில்லை . கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனால் பத்து லட்சம் கொடுப்பார்களாம், விபத்தில் இருந்து போனால் இரண்டு லட்சம் தான் தருகிறார்கள்” என்றார்.