அயோத்தி ராமர் கோயிலில் காவி கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி!

 
1 1

அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் காவிக்கொடியை ஏற்றி வைத்தனர்.

22 அடி நீளம் 11 அடி அகலத்தில் முக்கோண வடிவிலான காவிக்கொடியை இருவரும் ஏற்றிவைத்தபோது கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர்.

இதனை அடுத்து, அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோருக்கு காவிக்கொடியின் மாதிரியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நினைவு பரிசாக வழங்கினார்.