ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி..!!

 
PM Modi in Helicopter PM Modi in Helicopter


 திருச்சி விமான நிலையத்தில்  இருந்து ஹெலிகாப்டம் மூலம், பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் புறப்பட்டுச் சென்றார்.  

ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை புரிந்துள்ளார். 2 நாள் பயணமாக  நேற்றிரவு ராணுவ விமானத்தில்  தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து மீண்டும் திருச்சி விமான நிலையத்தை அடைந்தார்.  இரவு திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கிய அவர், இன்று காலை கங்கைகொண்ட சோழபுரம் செல்வதற்காக, விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையத்தை அடைந்தார்.  வழிநெடுகிலும் சாலையோரம்  காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் மலர்களை தூவி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

ஹெலிகாப்டரில்  கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி..!!

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து  பிரதமர் மோடி,  ஹெலிகாப்டர் மூலம்  அறியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு  முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கைகொண்ட  பிரகதீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில், சிவன் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.  பிரதமர் மோடிக்கும் கோயிலில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட இருக்கிறது.  பின்னர் வாரணாசியியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரைக் கொண்டு கங்கைகொண்ட சோழீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, கோயிலில் அமந்து  தியானம் செய்ய இருக்கிறார்.  

Image

மேலும், கோயில் சிற்பங்கள் , தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிடும் பிரதமர் மோடி,  தொடர்ந்து நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேர்கிறார். முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளையொட்டி  நடைபெறும் இந்த ஆடி திருவாதிரை விழாவில் , ராஜேந்திர சோழன் நினைவு நாயணத்தை அவர் வெளியிடுகிறார்.  இந்த விழாவை தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜாவின் திருவாசக சிம்பொனி  இசை நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்கிறார்.