பல்லடத்தில் பிரதமர் மோடி - சற்று நேரத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்!

 
pm modi

பல்லடத்தில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி பல்லடம் வந்தடைந்தார். 

2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று மாலை மதுரையில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். நாளை தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் நாளை பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி நிலையில் மதுரையில் ட்ரோன்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பல்லடம் மாதப்பூரில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி பல்லடம் வந்தடைந்தார். திறந்தவெளி வாகனத்தில் இருந்தவாரு பொதுமக்களை நோக்கி கையசைத்தார். அந்த திறந்தவெளி வாகனத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பல்லடத்தில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். 
 

News Hub