ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்த பிரதமர் மோடி..!!
டெல்லியில் நடைபெறும் இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க 2 நாள் அரசு முறை பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்த புதினை விமான நிலையத்திற்கே நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்தனர். பிரதமர் இல்லத்தில் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார்.
அதேவேளை, இந்த பயணத்தின்போது இந்தியா, ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்களை கையெழுத்தக உள்ளன.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினுக்கு பகவத் கீதையை பிரதமர் மோடி பரிசளித்துள்ளார். நேற்று இரவு விருந்துக்குப்பின் புதினுக்கு பகவத் கீதையை மோடி பரிசளித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பகவத் கீதையை ரஷிய அதிபர் புதினுக்கு பரிசளித்துள்ளேன். கீதையின் போதனைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Presented a copy of the Gita in Russian to President Putin. The teachings of the Gita give inspiration to millions across the world.@KremlinRussia_E pic.twitter.com/D2zczJXkU2
— Narendra Modi (@narendramodi) December 4, 2025