வேலூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி

 
Modi

பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வேலூர் விமான நிலையம் சென்றடைந்தார்.

Modi campaign

நீலகிரியில் எல்.முருகனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று பரப்புரை 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக இன்று காலை பரப்புரை மேற்கொள்கிறார். 

Modi rally 1

இந்நிலையில் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வேலூர் விமான நிலையம் சென்றடைந்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்; கூட்டணி வேட்பாளர்கள் ஏ.சி.சண்முகம், சௌமியா அன்புமணி உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பரப்புரை மேற்கொள்கிறார்.  பிற்பகல் 1:35 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டவுள்ளார்.