“பீகாரின் காற்று இங்கும் வீசுகிறதோ என்ற எண்ணம் எனக்கு வந்தது”- பிரதமர் மோடி

 
மோடி மோடி

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இயற்கை வேளாண்மை மாநாட்டில் 21 வது தவணையாக விவசாயிகளுக்கான பி.எம்.கிஷான் திட்டத்தின் படி உதவி தொகை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய இளைஞர்கள் விவசாயத்தை நவீனமயமானதாக பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். கடந்த 11 ஆண்டுகளில் ஒட்டுமொத்த வேளாண் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சக்தி பீடமாக கோவை விளங்குகிறது. சிறுவயதிலிருந்து தமிழ் கற்கவில்லை என்ற கவலை அடிக்கடி வந்துபோகும். சிறுவயதிலேயே தமிழ் கற்றுக்கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். தமிழை கற்றுக்கொண்டிருக்கலாமே என்று நான் அடிக்கடி நினைத்தது உண்டு.

நான் இங்கே வரும்போது விவசாய பெருமக்கள் தங்கள் கைகளில் இருந்த பச்சை துண்டை தலைக்கு மேலே உயர்த்தி சுழற்றினார்கள். பீகாரின் காற்று இங்கும் வீசுகிறதோ என்ற எண்ணம் எனக்கு வந்தது. ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு பருவத்தில்  இயற்கை விவசாயம் என்ற புரட்சியை தொடங்குங்கள்” என்றார்.