செப்.9ம் தேதி பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி..!

 
Q Q
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப். 9 ஆம் தேதி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில பாஜகவின் எக்ஸ் தளப் பக்கத்தில்,
பிரதமர் நரேந்திர மோடி செப். 9 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்கு வருகை தரவுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளார்.வெள்ளப் பாதிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வார். பிரதமரின் பஞ்சாப் பயணமானது, பாஜக அரசு எப்போதும் பஞ்சாப் மக்களுடன் இருப்பதை நிரூக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தல் நாளான செப்.9 இல் பஞ்சாபில் இருந்தவாறு பிரதமர் மோடி வாக்களிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.