பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி..

 
பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி..


பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை  பிரதமர் மோடி பார்வையிட்டார்.

2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி , சென்னையில் நேற்று ரூ. 5000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.  சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு இரவில் தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம்  மைசூருக்குச் சென்று தங்கினார். பின்னர் பிரதமர் மோடி இன்று (  9ம் தேதி ) நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள்  முகாமை பார்வையிடார். கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வந்த அவர் பந்திப்பூர் வனப்பகுதி, புலிகள் சரணாலயத்தை சுற்றிப் பார்த்தார்.  

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி..

பந்திப்பூர் வனப்பகுதியில் 22 கி.மீ. தூரம் பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணம் செய்கிறார். பிரதமர் வருகையையொட்டி நேற்று மாலை முதல் பந்திப்பூர் வழியாக செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் வாகன சவாரி மேற்கொண்ட  பிரதமர் மோடி,   நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு  சென்றுள்ளார்.   தெப்பக்காடு யானைகள் முகாமை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.