புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

 
stalin and modi stalin and modi

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு கேட்டறிந்தார். 

இது தொடர்பாக முதலமைச்சர் தனது எக்ஸ் வலைதள் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக என்னை தொடர்புகொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் மாண்புமிகு பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி - புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன். 


தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.