வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

 
நீட் தேர்வு சமவாய்ப்பற்றது; சி.பி.எஸ்.இ-க்கு சாதகமானது.. நீக்கப்பட வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்..

தென் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்  என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி

இன்று மாலை, திருநெல்வேலியில், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்பி இம்மானுவேல் சேகரனாரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாடு அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உரிமை இருந்தும்  ஏன் நடத்தவில்லை?தென் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொள்ளை போவதை  தடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெறும். தென் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.” என்றார்.