சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை எனில், திமுகவை மக்கள் சமூக அநீதி கட்சி என்பார்கள்- அன்புமணி ராமதாஸ்

 
anbumani ramadoss

தமிழகத்தில் உடனடியாக சாதி வாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம், நடவடிக்கை இல்லை  என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Anbumani Ramadoss


கோவை போத்தனூர் பகுதியில் பாமக சார்பில் “சமூகநீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற கருத்தரங்கம்” நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “சமூகநீதியை நிலைநாட்ட உடனடியாக தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும், ஜாதி என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி என்று கணக்கெடுப்பை எடுங்கள் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன். சாதி வாரி மக்கள் கணக்கெடுப்பு ஏன் தேவை என தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம். 

அதே போல திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு இடங்களை பார்வையிட்டு, முடிந்த உதவியை செய்தோம். இதுவரை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. 6 நாட்கள் ஆகியும் தண்ணீர் வெளியேற்றவில்லை. இரண்டு பிரதான சாலைகள் மட்டுமே தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது. முதல்வர் இரண்டு நாட்கள் அங்கேயே தங்கினால் வேலை நடக்கும். காலநிலை மாற்றம் குறித்து நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினோம். நிதி ஒதுக்கீடு தமிழகத்திற்கு தேவை, 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக முதல் கட்டமாக ஒதுக்கி அனுப்ப வேண்டும். தற்போது மத்திய அரசு வழங்கியது ஆண்டு தோறும் வழங்கும் நிதியை தான் கொடுத்துள்ளனர். அரிசியல் பேசாமல் உடனடியாக மக்களுக்கு உதவுங்கள். 

anbumani

உலகில் வாழும் அனைத்து தமிழர்களும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உதவ முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுகின்றேன். வானிலை தகவல்கள் மற்ற நாடுகளில் துல்லியமாக தகவல் வரும், இங்கு ஏன் துல்லியமாக கூற முடியவில்லை என்ற ஆதங்கத்தில் தான் நேற்று பேசினேன். அதிகாரிகளை குறைசொல்லவில்லை, அந்த தொழில் நுட்பம் இல்லை என்பது தான் ஆதங்கம். வடிகால் பணிகள் முறையாக திட்டமிடுவது இல்லை. வரும் காலம் மழை மற்றும் அல்ல வரட்சியும் வரும் எனவே முறையான நீர் மேலாண்மை செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக பேசுகிறார்கள், காவிரி குறுக்கே தமிழக அரசு அனுமதி பெறாமல் அணை கட்ட முடியாது. நீதிமன்றம், காவரி மேலாண்மை வாரியம் என அனைத்தும் கூறிவிட்டது. கர்நாடகாவில் காவிரி குறுக்கே அணைக்கட்ட முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.