திமுக ஆட்சி ஒன்றரை ஆண்டுகள்தான், அதன்பிறகு பாமக ஆட்சி: அன்புமணி ராமதாஸ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் 40,000 பேர் திமுகவிற்கு வாக்களித்ததாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கு வாக்களித்தவர்களுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், வெளியூர் நிர்வாக்களுக்கும் நன்றி அறிவிப்பு கூட்டம் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விக்கிரவாண்டியில் நடைப்பெற்றன. அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “விக்கிரவாண்டியில் பாமக வெற்றிப்பெற முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சியாக இல்லாமல் நாம் 56,296 வாக்கு பெற்றுள்ளோம். வாக்களித்தோர்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொகுதி மக்களை குறைசொல்லபோவதில்லை, ஏனென்றால் அவர்கள் பாவப்பட்ட மக்கள். நமக்கு கெளரவத்தை கொடுத்த மக்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மின் கட்டணம் உயர்வு எங்களுக்கு ஷாக் அடிப்பதாக ஸ்டாலின் அன்று கூறினார். இன்று 2 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்திவிட்டனர். மின்சாரத்துறையில் 10000 ஆயிரம் நட்டம் என்கின்றனர். ஆனால் 6000 கோடி மின் உயர்வு மூலம் வருவாய் கிடைக்கும். காவேரி நடுவர் நீதிமன்றம் உத்தரவை கர்நாடக அரசுக்கு தமிழக்கத்திற்கு தண்ணீரை கொடுக்க வேண்டும். விக்கிரவாண்டி தேர்தலில் பல பாடங்களை கற்றுக்கொண்டோம். திமுக ஆட்சி இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான். அதன்பின் பாமக ஆட்சி தான்.அதற்கு தற்போதில் இருந்தே உழைக்க வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தல் போட்டியிடுவதற்கு யார், யார் வேட்பாளராக நிற்க வைக்க வேண்டும் அதற்கு தற்போதே திட்டமிட வேண்டும்” என்றார்.