2026ல் கூட்டணி ஆட்சி நடைபெறும்; அந்த கூட்டணியில் பாமக இருக்கும்- அன்புமணி ராமதாஸ்
2026 இல் கூட்டணி ஆட்சி இருக்கும், அந்தக் கூட்டணியில் பாமக இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கொராட்டூரில் ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் பேட்மிண்டன் விளையாட்டுக்கு கூடுதலாக உள் விளையாட்டு அரங்குகள் வேண்டும். மற்ற மாநிலங்களில் அதிக அளவில் மாநில தலைநகரங்களில் உள் விளையாட்டு அரங்கங்கள் உள்ளது. ஆனால் சென்னையில் அரசு நடக்கும் பேட்மிண்டன் உள் விளையாட்டு அரங்கங்கள் இல்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களுக்கு என் வேண்டுகோள் ஹைதராபாத், அஸ்ஸாம் போன்று பன்னாட்டு தரத்தில் சென்னையில் மிகப் பெரிய அளவில் பேட்மிண்டன் உள் விளையாட்டு ஒன்றை கட்ட வேண்டும். திமுக கொடுத்த 500மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, அரசு ஊழியர்கள் கான பழைய ஒய்வு ஊதியம் என்னவானது. 57 ஆண்டு காலம் அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளும் ஆட்சி செய்தன. சென்னை மழை நிலைமையே 2 கட்சிகளின் ஆட்சிக்கு உதாரணம்” என்றார்.
தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், 2026-இல் கூட்டணி ஆட்சி அமையும், அந்த ஆட்சியில் பாமக இருக்கும் என்று கூறினார். யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சிரித்தபடியே நகர்ந்தார்.