கடலூர் மக்கள் பாவப்பட்டவங்க.. சென்னை மக்கள் புண்ணியம் பண்ணவங்களா? - அன்புமணி

 
அன்புமணி ராமதாஸ் அன்புமணி ராமதாஸ்

தமிழகத்துக்கு முதல் தவணையாக  944 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது, இரண்டாவது தவணையாக 2000 கோடி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் 


விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகேயுள்ள தேவனூரில் பாமக சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் கல்ந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாதிக்கபட்ட மக்களுக்கு மருத்துவம் பார்த்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், “பெஞ்சல் புயலில் முன்னறிவிப்பு இல்லாமல் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிகப்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பு அரசு ஏற்க வேண்டும், திறமையற்ற அரசாக திமுக அரசு செயல்படுகிறது. வெள்ளம் வந்ததால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்திற்கு முதல் தவணையாக 944 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது, இரண்டாவது தவணையாக ஒன்றிய அரசு வெள்ள நிவாரணம் 2 ஆயிரம் கோடி கூடுதலாக அறிவிக்க வேண்டும்.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்களுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது 6 ஆயிரம் வழங்கிய அரசு விழுப்புரம், கடலூர் மாவட்டத்திற்கு 2 ஆயிரம் அறிவிக்கிறார்கள். இதில் என்ன பாகுபாடு பார்த்து நிவாரணம் வழங்குகிறார்கள்? முன்னெச்சரிக்கையாக சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறக்கபடவில்லை. வெள்ளத்தால் உயிரிழந்ததற்கு ஸ்டாலின் அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும், வடமாவட்ட மக்கள் மீது ஏன் வன்மம்? இந்த மக்கள் பாதிக்கப்பட்ட இரண்டாயிரம் சென்னை, தூத்துக்குடி மக்கள் பாதித்தால் ஆராயிரம் வழங்குகிறார்கள். மக்கள் துயரத்தில் எல்லாத்தையும் இழந்து உள்ளார்கள். எல்லாம் மழையில் அடித்து செல்லப்பட்டது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரணமாக 20 ஆயிரம் கோடி வழங்க வேண்டும், மத்திய அரசு பணம் கொடுதால் தான் நிவாரணம் கொடுப்போம் என்றால் எதற்கு தமிழக அரசாங்கம் உள்ளது? பேரிடர் நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திமுக அரசு மீது மக்கள் கோவத்தில் உள்ளனர். விஜய் போன்று பாமக விளம்பரம் அரசியல் செய்வதில்லை, களத்தில் இருந்து மக்கள் பணி செய்து கொண்டு இருக்கிறது” என்றார்.