“சூழ்ச்சி செய்து அப்பா, பிள்ளையை பிரித்தது ஜி.கே.மணி தான்! மனிதராக இருக்கவே தகுதியற்றவர்”- அன்புமணி

 
ச் ச்

பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்று கூடி முன்னாள் பாமக தலைவர் ஜி.கே.மணி கௌரவ தலைவர் பா.ம.க  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

Image

இக்கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “ஜி.கே.மணியை பாமகவில் இருந்து நீக்குவது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி அறிக்கை அளிக்க வேண்டும். என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் இருந்து ஜி.கே.மணி சூழ்ச்சியை ஆரம்பித்துவிட்டார். சூழ்ச்சி செய்து அப்பா- பிள்ளையை பிரித்தது ஜி.கே.மணி தான். என்னென்னவோ சொல்லி அப்பா- பிள்ளை உறவில் இடைவெளியை உண்டாக்கி விட்டனர். ராமதாஸ் ஐயா குழந்தை மாதிரி மாறிவிட்டார். அவரை சுற்றி நடப்பது அவருக்கே தெரியவில்லை. அவரின் அறிக்கையில் என்ன உள்ளது என்பதும் அவருக்கு தெரியாது. ஜி.கே.மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி இல்லாத நபர்கள். ஜி.கே.மணி துரோகி. ந்த துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். எவ்வளவு அவமானங்கள் பட்டு இருக்கேன்.. யாரையும் சும்மா விட மாட்டேன். 

பாமகவை பலவீனப்படுத்த திமுக கைக்கூலிகளை வைத்து செயல்படுகிறது. நம்மிடையே நேரடியாக மோத முடியாமல் திமுக குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறது. பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு திமுக தான் காரணம். ஐயா ராமதாஸை சுற்றி தீய சக்திகளும், திமுகவின் கைக்கூலிகளும் இருக்கின்றன” என்றார்.