“பா.ம.க. யாருடைய சொத்தும் இல்லை; அடிமட்ட தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்”- அன்புமணி

 
ச ச

பா.ம.க. யாருடைய தனிச்சொத்தும் இல்லை, அடிமட்ட தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Image

பாமக நிறுவனர் ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து, சென்னை பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அவர், “தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் நான். பொதுக்குழுவால் உங்களால் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். அது நான் மட்டுமல்ல. நாம் அனைவரும் அப்படித்தான் தேர்வு செய்யப்பட்டோம். பாட்டாளி மக்கள் கட்சி என்றால் நீங்கள்தான். இது யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது. என்னுடைய கடமை உங்களுடன் சேர்ந்து அடிமட்ட தொண்டனாக வேலைசெய்வேன்.  பொறுப்புகள் வரும், போகும். உங்கள் அன்புதான் நிரந்தரம். ஆனால் நமக்குள் வேற்றுமைகள் இருக்கக் கூடாது. 

Image

சமூகநீதிப் போராளி மருத்துவர் அய்யாவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த களத்தில் வேகமாக இறங்குவோம்.  உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் என் தாய் தான். என் தாய் மீது ஒரு துரும்பு கூட விழ நான் ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன். தனது தாயை நான் தாக்க முயன்றதாக கூறியது மிகப்பெரிய வேதனை. நான் தலைவராக பொறுப்பேற்ற பின் என்னால் சுதந்திரமாக செயல்படவே முடியவில்லை. ஆனால் இன்றிலிருந்து என்னால் சுதந்திரமாக செயல்பட முடியும் என நம்புகிறேன். எந்த சோதனை வந்தாலும் சாதனையாக மாற்றுவோம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.