"3 பேர் கட்டுப்பாட்டில் ராமதாஸ் உள்ளார்” - அன்புமணி பேச்சு
கடந்த 5 ஆண்டுகளாக ஐயா, ஐயா-வாக இல்லை; ஐயா-வாக இருந்து எதனைசொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு இருப்பேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சென்னை பனையூரில் நடந்த பாமக ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “ராமதாஸ் கூறியதாலேயே 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன். அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணி வேண்டாம் என சொல்ல போகிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ் சரி என்று சொல்லியதால்தான் பாஜகவினர் தைலாபுரம் வந்தனர். அதன்பிறகுதான் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. தற்போது இல்லை என மறுக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் மீது காங்கிரஸ், விசிகவுக்கு திடீர் பாசம் ஏன்? ராமதாஸை புகழ்ந்து பேசுவதும், அவரை திடீரென சந்திப்பது எல்லாம் திமுகவின் சூழ்ச்சி. ராமதாஸ் குழந்தை போல் மாறிவிட்டார்.
கடந்த 5 ஆண்டுகளாக ஐயா ஐயாவாக (ராமதாஸ்) இல்லை. ஐயா ஐயாவாக இருந்து எது சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். யாரும் பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சனம் செய்யக் கூடாது. இதனை மகனாகவும் மருத்துவராகவும் சொல்கிறேன். 3 பேர் கட்டுப்பாட்டில் ராமதாஸ் உள்ளார்” என்றார்.


