அரசு ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது!

 
pmk

அரசு ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ்  தெரிவித்துள்ளார்  

Anbumani ramadoss

தமிழகத்தில் ஆசிரியர் நேரடி பணி நியமனத்தில் உச்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 என்றும் இதர பிரிவுகளுக்கு 45 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் , உடற்கல்வி ஆசிரியர்,  கணினி பயிற்றுநர்கள் ஆகிய பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினருக்கு 40 வயது விதவை பெண்களுக்கு 45 வயது என்றும்  மனித வள மேலாண்மை துறை அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்ய வயது உச்ச வரம்பு 30 லிருந்து 32 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

cm stalin

இந்நிலையில்  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், "அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-லிருந்து 45 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-லிருந்து 50 ஆகவும் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது  வரவேற்கத்தக்கது. இது  40 வயதைக் கடந்தவர்களின் ஆசிரியர் பணி கனவை நனவாக்க உதவும்! ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை அகற்ற வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த ஒரு மாதத்தில் மருத்துவர் அய்யா இருமுறை இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். பா.ம.க.வின் கோரிக்கை ஓரளவாவது ஏற்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!வயது வரம்பு உயர்வு அடுத்த ஆண்டு வரை மட்டுமே செல்லும் என அரசு அறிவித்திருப்பது நியாயமல்ல. அடுத்த ஆண்டிற்குள் 42 வயதைக் கடந்த அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க முடியாது. எனவே, வயது வரம்பு உயர்வு குறைந்தது பத்தாண்டுகளுக்கு செல்லும் என்று அறிவிக்க வேண்டும்!" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.