"தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்" - தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!!

 
pmk

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் சாலைகள் அமைப்பதற்கான  மண் பற்றாக்குறையால் 1572 கி.மீ நீளத்திற்கான 45 தேசிய நெடுஞ்சாலைத்  திட்டங்கள்  முடங்கிக் கிடப்பதாகவும், அவற்றை விரைவுபடுத்த ஒத்துழைக்கும்படியும்  தலைமைச் செயலருக்கு, மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். நெடுஞ்சாலைப் பணிகள் முடங்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல! தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு 8.70 கோடி கன அடி மண் தேவைப்படும் நிலையில், இப்போது வழங்கப்படும் வேகத்தில் மண் வெட்ட அனுமதி வழங்கப்பட்டால் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த பணிகள் முடியாது என்பதால்,  அனுமதி வழங்குவதை அரசு விரைவுபடுத்த வேண்டும்!  நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தித் தருவதில் நிலைமை மேம்பட்டுள்ள நிலையில், மண் அள்ளுவதற்கான அனுமதியையும் தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும்.  தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துவதில் மத்திய அரசுக்கு ஒத்துழைத்து, அதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்க வேண்டும்!" என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

pmk
 
முன்னதாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமரை சந்தித்த மு.க.ஸ்டாலின்  தமிழ்நாட்டில் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அது தமிழ்நாட்டு அரசின் நிலை என்றால்,‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது’’ என்று தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கூறியிருக்கத் தேவையில்லை. மாறாக, 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப் படாது; அதனால் உழவர்கள் எந்த வகையிலும் அச்சப்படத் தேவையில்லை என்று உறுதியாக கூறியிருக்கலாம்.

pmk

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டு உழவர்களிடம் நிலவும் அச்சத்தை தமிழக அரசு போக்க வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை  அனுமதிக்க மாட்டோம் என்று அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மாறாக 8 வழிச்சாலை திட்டம் திணிக்கப்பட்டால் அதை எதிர்த்து அரசியல் மற்றும் சட்டப்போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும் என்று ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.