மீண்டும் ராமதாஸ் உடன் இணைந்து செயல்படுவது முடிந்து போன கதை- அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, "அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழ்நாட்டு மக்கள் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்.தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டது. தமிழகத்தில் நடப்பது ஒரு காட்டாட்சி, மக்களாட்சி, ஊழலாட்சி. The biggest failier of the dmk government is not only selling tasmac, other types of drugs.நகரம் முதல் கிராமம் வரை போதைபொருள் கிடைத்து வருகிறது. திமுக அரசு அகற்றப்பட வேண்டும். கலைஞர் மதுக்கடைகளை திறந்து 3 தலைமுறை நாசப்படுத்தினர். ஸ்டாலின் போதைப்பொருளை கொண்டு இந்த தலைமுறையை நாசப்படுத்திவிட்டார். எல்லாத் துறைகளிலும் ஊழல் நடந்து கொண்டிருக்கின்றது அதிமுக ஆட்சி அமைந்த உடன் விசாரணை நடத்தப்படும்.
முதல்வர் ஸ்டாலின் அன்றாடம் ஒரு பொய்யை சொல்லி வருகிறார்.தொழில் முதலீட்டிற்கு 2 லட்சம் கோடி தான் ஒப்புதல் வழங்கியுள்ளார்கள்.ஆனால் 12.15 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாக பொய்யை சொல்கிறார்கள். அதிலும் 1 லட்சம் கோடி தான் முதலீடு செய்துள்ளார்கள்.எங்கள் கூட்டணி உணர்வுப்பூர்வமான கூட்டணி. திமுக குழப்பமான கூட்டணி. காங்கிரசு, விசிக, வைகோ என ஒவ்வொரும் பிச்சி போய் உள்ளார்கள்.எங்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரவுள்ளது.அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தியும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக 125 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. ஆனால் இப்போது வியாபாரிகளின் போர்வையில் அமைச்சர்கள் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று செய்து வருகிறார்கள். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளை மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி ஒற்றை இலக்கை வெல்லும். முதல்வருக்கு பயம் வந்துவிட்டது. அன்றாடம் எதையாவது சொல்ல வேண்டும் என்று உளறிக் கொண்டுள்ளார். மீண்டும் ராமதாஸ் உடன் இணைந்து செயல்படுவது முடிந்து போன கதை” என்றார்.

