“ராமதாசை சுற்றி சில துரோகிகள் இருக்கிறார்கள், அதில் முக்கியமான துரோகி இவர் தான்”- அன்புமணி பரபரப்பு
தமிழ்நாட்டில் இளைஞர் புரட்சியால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “திமுக ஆட்சியின் அவலங்களை வீடு வீடாக எடுத்துச் சொல்லுங்கள். திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திரும்பிய திசையெல்லாம் ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் இளைஞர் புரட்சியால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். திமுக பணத்தை மட்டும் தான் வைத்திருக்கிறது. மிக பெரிய வெற்றி கூட்டணியில் நாம் இணைந்துள்ளோம்... குறைந்தது 200 தொகுதியில் வெற்றி பெறுவோம்
கட்சியும் சின்னமும் நமக்கே சொந்தம். ஆனால் ராமதாஸிடம் பொய் சொல்கின்றனர். ராமதாஸிடம் பொய் பொய்யாகக் கூறி அவரது மனதை மாற்றுகின்றனர். ராமதாஸை சுற்றி சில துரோகிகள் உள்ளனர்,அதில் முக்கியமானவர் ஜி.கே.மணி. நேற்று கூட நமக்கு தான் நீதிமன்றம் நல்ல தீர்ப்பு கொடுத்திருக்கிறது; ஆனால் ராமதாஸ் ஐயாவிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.


