அரசியலில் பரபரப்பு திருப்பம்! தவெக அலுவலகத்திற்கு பாமக நிர்வாகிகள் வருகை

 
s s

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை புரிந்துள்ளனர்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை புரிந்துள்ளனர். பாமக சார்பில் வரும் 17 ம் தேதி சாதி வாரிய கணக்கெடுப்பு குறித்து நடைபெறவுள்ள போராட்டத்திற்கு தவெக பங்கேற்க அழைப்பு விடுக்க வருகை தந்துள்ளனர். அன்புமணி சார்பில் அழைப்பு கடிதத்தை தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், நிர்வாகிகளிடம் வழங்கினர்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்  வரும் 17-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில்   அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.