கரூரில் நடைபெறவிருந்த பாமக பிரச்சாரம் ரத்து- அன்புமணி
Sep 28, 2025, 11:00 IST1759037401449
கரூரில் இன்று நடைபெறவிருந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ரத்து செய்யப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் த.வெ.க. பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சொந்தங்களுக்கு இரங்கல் செலுத்தும் வகையிலும், அவர்கள் குடும்பங்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் வகையிலும், கரூர் உழவர் சந்தைப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று மாலை நடைபெறவிருந்த எனது தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஒத்திவைக்கப்படுகிறது. பரப்புரைக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


