அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன் - ராமதாஸ் பரபரப்பு பேட்டி
May 29, 2025, 11:16 IST1748497598555
அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்தேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவில் கடந்த சில நாட்களாகவே அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் முற்றியதை எடுத்து அன்புமணியே கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். ஆனால் நான் தான் பாமக தலைவர் என்று அன்புமணி தொடர்ந்து கூறி வருகிறார். இதனை தொடர்ந்து ராமதாஸ் கூட்டிய பல்வேறு கட்சி கூட்டங்களில் அன்புமணி பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்தேன்.தவறு செய்தது அன்புமணி அல்ல, 35 வயதில்
மத்திய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்து விட்டேன். அன்புமணி தான் தவறு செய்து தவறான
ஆட்டத்தை துவங்கினார். நான் என்ன தவறு செய்தேன் என அன்புமணி பேசியது, முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி என கூறினார்.


