“பா.ம.க.வில் கடும் நெருக்கடி... மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு”- ஜி.கே.மணி
என்ன சொல்றதுனே தெரியவில்லை. மன உளைச்சலில் இருக்கேன். மனசுக்கு கஷ்டமாகவும், வேதனையாவும் இருப்பதாக தைலாபுரத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி பேட்டியளித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து, சென்னை பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அதேசமயம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, தீரன் உள்ளிட்டோர் உடன் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை செய்தார்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, “பாமகவின் நெருக்கடியான சூழலை பார்த்து மிகுந்த மனவேதனையிலும், மன உளைச்சலிலும் இருக்கிறேன், பிரச்சனைகளை கடந்து வலிமையாகவும், பலமாகவுமான கட்சியாக பாமக மீண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். பாமக பலமான கட்சி, தனித்தன்மையான கட்சி. தேர்தலை சந்திக்கும் நேரத்தில் பிரச்சினை, எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்” என்றார்.


