ஆண்களுக்கு, அன்புச் சகோதரர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி
சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித குலத்தின் ஆண் சிங்கம், மாமனிதர்கள், மாபெரும் தலைவர்கள், மகான்கள், அர்ப்பணிப்புமிக்க தியாகங்களின் தியாகசீலர்கள், மாண்புமிக்கவர்கள், மாவீரர்கள், மாபெரும் அறிஞர்கள், மகத்தான சாதனையாளர்கள், என போற்றப்படும் ஆண்களை பெருமைப்படுத்தவும், தியாகங்களை போற்றவும், கௌரவிக்கவும், விழிப்புணர்வு, மேம்பாடு போன்ற முக்கியத்துவத்தை வெளிப்படுத்த ஐ.நா. அவையால் ஆங்கிகரிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடைபிடிக்கும் நாளான இன்று பேராண்மை மிக்க ஆண்கள், அன்பு சகோதரர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
ஆண் சிங்கம் எனும் பேராண்மை மிக்க ஆண்கள் சிங்கக் குடிட்டியாக, வீரம் மிக்க இளம் சிங்கமாக, குடும்பத் தலைவராக, தந்தையாக, மகனாக, கணவராக, சகோதரனாக, பேரனாக, தாத்தாகவாக, தோழராக, நண்பராக இருப்பவர்கள் ஆண்கள், ஆணுக்கு துணை, இணை,பக்கபலம் பெண் என்பதையும் எண்ணிப் பெருமைப்படுகின்றோம்.
நவம்பர் 19 - உலக ஆண்கள் தினம் - ஜி.கே.மணி
— G.K.Mani (@PmkGkm) November 19, 2024
மனித குலத்தின் ஆண் சிங்கம், மாமனிதர்கள், மாபெரும் தலைவர்கள், மகான்கள், அர்ப்பணிப்புமிக்க தியாகங்களின் தியாகசீலர்கள், மாண்புமிக்கவர்கள், மாவீரர்கள், மாபெரும் அறிஞர்கள், மகத்தான சாதனையாளர்கள், என போற்றப்படும் ஆண்களை… pic.twitter.com/ZVlF2IrTuu
தாயையும் மனைவியையும் குழந்தைகளையும் உறவினர்களையும் அரவணைத்து ஒற்றுமைப்படுத்தி குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு மிக்கவர் ஆண். கடின உழைப்பு, பொருள் ஈட்டுதல், குடும்பத் தேவைகளை நிறைவேற்றுதல், குடும்பப் பெருமையை உயர்த்துதல், எல்லோரிடமும் சகோதர நல்லினக்கத்தை பேணுதல், உறவினர்கள் -நண்பர்கள் உறவு முறை காத்தல், கடன் சுமை தாங்குதல், சமூக கெளரவத்தை மேம்படுத்தல், தனது அடுத்த தலைமுறை வாரிசுகளை உயர்த்துதல் போன்ற ஏராளமான பெருஞ்சுமைகளை சுமத்தல் - அதிகம் பிரச்சினைகளை சந்திப்பவர்கள், சமாளிப்பவர்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் போன்ற எண்ணற்ற நிலைகளை தினம் தினம் கடந்து உயர்ந்து நிற்பவர்கள் ஆண்கள், அன்பும் பாசமும் நேசமும் கொண்டு மற்றவர்க்கு உதவி செய்பவர்கள், நேர்மையானவர்கள், கடமை தவறாதவர்கள், தியாகம் செய்பவர்கள், கொள்கை மிக்கவர்கள், இலட்சியவாதிகள், கனவு காண்பவர்கள், நற்பண்புமிக்கவர்கள், நல்லவர்கள், சமூக உணர்வு உள்ளவர்கள், சுமத்தல் -குடும்பத்தை, ஊரை, நகரத்தை, நாட்டை, உலகத்தை உயர்த்தக் கூடியவர்கள் போன்ற ஏராளமான சிறப்புகளை, பண்புகளை கொண்ட பேராண்மை மிக்க ஆண்களை போற்றுவோம். பெருமைப்படுத்துவோம். மரியாதை செலுத்துவோம்.