பாமக பொறுப்பாளர் சடலமாக மீட்பு!
Jun 12, 2025, 08:51 IST1749698515243
வேலூர் மாவட்ட பாமக இளைஞரணித் தலைவர் சாலையோரம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக-வின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணித் தலைவராக செயல்பட்டு வந்த சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சக்ரவர்த்தி (48). இபர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக்ரவர்த்தி தலையில் காயங்களுடன் சாலையோரம் சடலமாக கிடந்துள்ளார். சாலை விபத்தா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


