மக்களவை தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறது பாமக

 
tn

பாஜக - பாமக இடையில்  கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ராமதாசுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் சந்தித்த நிலையில்  பாஜக கூட்டணியில் பாமகவுக்கு பத்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

TN

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற ஒப்பந்தத்தையடுத்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றம் வரவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.   மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்படுவார்.  கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அங்கமாக பாமக இருந்து வருகிறது என்றார்.   

TN

இந்நிலையில் மக்களவை தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறது பாமக. ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், அச்சின்னம் நாடாளும் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.