ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு உரிமையாளர் டி.ஆர்.பி. ராஜாவா?- பாமக பாலு

 
k baalu k baalu

தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனம் உறுதியளித்ததா, இல்லையா? என்பது தான்  இங்கு பிரச்சினை என பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு தெரிவித்துள்ளார்.

Junior Vikatan - 20 November 2024 - 2026-ல் அதிகாரப் பகிர்வு இல்லாமல்,  யாரும் ஆட்சியமைக்க முடியாது! - அடித்துச் சொல்கிறார் பா.ம.க கே.பாலு | pmk  Spokesperson advocate k balu ...

இதுதொடர்பாக  பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே. பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உறுதியளித்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்த நிலையில், அப்படி எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்புத் தெரிவித்திருந்தது. அதைச் சுட்டிக்காட்டி  திமுக அரசின் மோசடியை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அம்பலப்படுத்தியிருந்தார். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. வானத்திற்கும், பூமிக்குமாக  எகிறிக் குதித்திருக்கிறார். ஆனால், கடைசி வரை மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவில்லை.

தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனம் உறுதியளித்ததா, இல்லையா? என்பது தான்  இங்கு பிரச்சினை. ஒரு மாநிலத்தில் ஒரு நிறுவனம் முதலீடு செய்கிறதா, இல்லையா? என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனம் தான்  தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை  ஃபாக்ஸ்கான்  இந்தியா  நிறுவனத்தின்  பிரதிநிதி ராபர்ட் வூ  தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியது உண்மை; ஆனால், புதிய முதலீடுகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பதை அறிக்கை மூலம் ஃபாக்ஸ்கான் நிறுவனமே தெளிவுபடுத்தி விட்டது.

அதுமட்டுமின்றி இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு அரசுக்கும், ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்திற்கும் இடையே எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் திங்கள்கிழமை கையெழுத்தாகவில்லை. இதன் மூலம் திமுக அரசின் முகமூடி கிழிந்து விட்டது. தமிழ்நாட்டில் புதிய முதலீட்டை உறுதி செய்யவில்லை என்று ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனமே  தெளிவுபடுத்தி விட்ட பிறகு,‘‘ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் 15,000 கோடி முதலீடு செய்து 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது உறுதியான, சரியான, எந்தவித தவறும் இல்லாத 100/100 உண்மையான செய்தி” என்று கூறுவதற்கு டி.ஆர்.பி. இராஜா யார்? ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரா அவர்? ஃபாக்ஸ்கான்  இந்தியா  நிறுவனத்தின் புதிய பிரதிநிதியாக ராபர்ட் வூ அண்மையில் பொறுப்பேற்றார். அதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ராபர்ட் வூ மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கிறார் அல்லது சந்திக்க வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால்,  திமுக அரசு தான் இந்த  எளிய நிகழ்வை வைத்துக் கொண்டு திரைக்கதை வசனங்களையெல்லாம் எழுதி  ரூ.15,000 கோடி முதலீட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. அந்த நாடகம் அரை நாளில் அம்பலமானதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்.

Anbumani continuing as party President': PMK leader K Balu after Ramadoss  removes son from party

டி.ஆர்.பி. இராஜா மற்றும் அவரது குழுவினர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்களை இத்தகைய நாடகங்களின் மூலம் ஏமாற்ற முடியாது. திமுக அரசு நடத்தும் நாடகங்களின் கிளைமாக்ஸ் காட்சி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  அதற்கு திமுகவே எதிர்பாராத முடிவை அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டு மக்கள் எழுதுவார்கள். இது உறுதி. நிறைவாக ஒன்று.... அரசியல் களத்தில் ஓர் தலைவர் அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கு  சம்பந்தப்பட்டவர்கள் அரசியல்ரீதியில் பதில் அளிக்க வேண்டும். அரசியல்ரீதியாக பதிலளிக்க முடியாதவர்கள் தான் குற்றச்சாட்டு முன்வைத்தவர்களின் குடும்ப சிக்கலை இழுப்பார்கள். அப்படித் தான் கோழை டி.ஆர்.பி. இராஜாவும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் குடும்பப் பிரச்சினையை இழுத்திருக்கிறார். திமுகவின் கலாச்சாரமே இது தான். திமுகவிடமிருந்து ஒருபோதும் நாகரீக அரசியலை எதிர்பார்க்க முடியாது. அமைச்சர் டி.ஆர்.பி. இராஜாவின் குடும்பப் பிரச்சினைகள் குறித்தும், திமுகவில் உள்ள பலரின் குடும்பப் பிரச்சினைகள் குறித்தும்  பேச வேண்டும் என்று நினைத்தால் ஆயிரமாயிரம் விஷயங்கள் உள்ளன. ஆனால்,  அவற்றையெல்லாம் நாங்கள் பேச மாட்டோம். அது நாகரீகமும் இல்லை; அரசியல் அறமும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். அவற்றையெல்லாம் பேசும் அளவுக்கு எங்கள் தலைமை எங்களை மோசமாக வளர்க்கவில்லை.

திமுகவின் முதல் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையால்  மதுரையில் 3 தொழிலாளர்கள் கொடூரமான முறையில் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டதை தமிழ்நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.  அந்தக் கொடூரம் நிகழ்ந்த பிறகும் கிடைக்க வேண்டியவை கிடைத்த பிறகு ‘‘இதயம் இனித்தது... கண்கள் பனித்தன”என்று கூறி கைகோர்த்துக் கொண்டதெல்லாம் தமிழக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. அவற்றையெல்லாம் மீண்டும், மீண்டும் நினைவூட்டும் நிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சியை  டி.ஆர்.பி. இராஜாவும், பிற அறிவாலய பூசாரிகளும்  தள்ளிவிடக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.