“அன்புமணியை நீக்க ராமதாஸ்க்கு அதிகாரம் இல்லை" - கே.பாலு

 
ச் ச்

அன்புமணி ராமதாசை நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும் அது தங்களை கட்டுப்படுத்த எனவும் வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக வழக்கறிஞர் கே.பாலு, “ராமதாஸ் அறிவிப்பு, விதிகளுக்கு எதிரானது
அவரின் அறிவிப்புகள், பாமகவை கட்டுப்படுத்தாது. தலைவராக, அன்புமணி தொடர்ந்து செயல்படுவார். மாமல்லபுரதலதில் நடந்த பொதுக்குழுவில் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பொதுக்குழு முடிவுகளை ஆகஸ்ட் 10ஆம் தேதி முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டோம்.

எங்களது விளக்கத்தை உரிய வகையில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து, தலைவர் செயலாளர் பொருளாளர் பதவிக்காலத்தை பொதுக்குழு தீர்மானத்தின்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனரின் அறிவிப்புகள் எதுவுமே பாமகவை கட்டுப்படுத்தாது. கட்சி விதிகளின்படியும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படியும் தலைவர் அன்புமணி, செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா தான். கட்சி நிறுவனர் ராமதாஸ் என்பதில் எந்த மாற்றமும் இல்லை,கட்சியின் அதிகாரப்பூர்வமான செய்தி தொடர்பாளர் நான் தான். உளவு பார்க்கும் பழக்கம் அன்புமணிக்கு கிடையாது. அன்புமணி உளவு பார்த்தார் என்று சொல்வது தவறு. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். உயர் நீதிமன்றத்தில் கேவியட் முதல் நாங்கள்தான் தாக்கல் செய்திருக்க வேண்டும்” என்றார்.