“பாமகவில் பிரச்சனை சரியாக கூடாது என அருள் போன்ற சிலர் செயல்படுகின்றனர்”- வன்னியர் சங்க நிர்வாகி

 
அருள் அருள்

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சொல்லி மக்களையும், பாமகவினரையும் திசை திருப்புகிறார் என்று  அக்காட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பாமக முன்னாள் எம்எல்ஏ கார்த்தி செய்தியாளர் சந்திப்பு

சேலத்தில் பாமகவின் மாநில ஒருங்கிணைப்பாளரும்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அன்புமணியின் ஆதரவாளருமான மு.கார்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சட்டமன்ற உறுப்பினர் அருள் உண்மைக்கு புறம்பான தகவல்களை ஊடகத்தில் சொல்லி மக்களையும் பாமகவினரையும் திசை திருப்புகிறார். அன்புமணி குறித்து பேச அருளுக்கு என்ன தகுதி இருக்கிறது? ராமதாஸும் அன்புமணியும் இரண்டு கண்கள் என்றால் எதற்காக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்? அருளின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறேன். அன்புமணி இதுவரை ராமதாஸ் குறித்து தவறாக பேசியதில்லை, கட்சியினரையும் பேச அனுமதித்ததில்லை. எனவே, அருள் மீண்டும் இதுபோல் பேசினால் அன்புமணி கூறினாலும் கேட்கமாட்டோம், எதிர்வினை ஆற்றுவோம்


பாமக நிறுவனர் ராமதாஸிற்கு வயது மூப்பு காரணமாக நினைவாற்றல் குறைந்து விட்டது. அருளுக்கு இணை செயலாளர் பொறுப்பு வழங்கிய அடுத்த நாள் அவருக்கு நினைவில்லை, இதனால் தான் அன்புமணி அவரை குழந்தை போல மாறிவிட்டார் என குறிப்பிட்டார், மற்றபடி உள்நோக்கம் ஏதும் இல்லை. அன்புமணியை அமைச்சாரக்கியதை ராமதாஸ் இப்போது சுட்டிக்காட்டுகிறார்... யார் சொல்லி ராமதாஸ் பேசுகிறார்? பாமகவின் இந்த நிலைக்கு சிலரது செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அன்புமணி ஆதரவாளர்களால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அருள் கூறுகிறார். பாமகவினரால் ஒருபோதும் அவருக்கு அச்சுறுத்தல் இருக்காது. அவரது சொந்த நடவடிக்கைகளால் ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம், பாமகவில் நிலவும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் சுமூகமாக முடியும். வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என்றார்.