வன்னியர் இடப்பங்கீட்டிற்காக இன்னுயிர் ஈந்த 21 தியாகிகளையும் போற்றுவோம் - அன்புமணி ராமதாஸ்

 
anbumani ramadoss anbumani ramadoss

வன்னியர் இடப்பங்கீட்டிற்காக இன்னுயிர் ஈந்த 21 தியாகிகளையும் எந்நாளும் போற்றுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சமுதாயத்தில் அடித்தட்டுக்கும் கீழ்  பின் தங்கிக் கிடந்த பாட்டாளி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக  மருத்துவர் அய்யா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமூக நீதிப்  போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கும்,  தாக்குதலுக்கும் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளுக்கும் இன்று  36-ஆவது நினைவு நாள். அவர்கள் செய்த ஈடு இணையற்ற தியாகத்திற்காக அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும்  வணங்குகிறேன், போற்றுகிறேன்.


வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் மருத்துவர் அய்யா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சமூகநீதிப் போராட்டத்தின் இலக்கு ஆகும். அந்த நோக்கத்தை நாம் வென்றெடுக்கும் நான் வெகுதொலைவில் இல்லை. அந்த இலக்கை அடைவதற்கான அனைத்து வழிகளிலும் போராடுவதற்கு நாம் தயாராவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.