தியாகி சங்கரலிங்கனார் நினைவை போற்றுவோம்...புகழஞ்சலி செலுத்துவோம் - ஜி.கே.மணி

 
gk mani

தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி 76 நாட்கள் உண்ணாநிலை மேற்கொண்டு உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினத்தில் அவரது நினைவை போற்றுவோம், புகழஞ்சலில் செலுத்துவோம் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி தியாகி சங்கரலிங்கனார் 1956 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 27 ஆம் நாள் விருதுநகர் சோளக்கரைமேட்டில் தனிநபராக உண்ணாநிலை மேற்கொண்டார். அதன் பின்னர் விருதுநகர் தேசபந்து மைதானத்திற்கு இடம் மாற்றி உண்ணாநிலையை தொடர்ந்திருந்தார். 60 நாட்கள் கடந்த நிலையில் உடல் நிலை மிகவும் மோசமானதால், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, மா.பொ.சி,தோழர் ஜீவா ஆகியோர் உண்ணாநிலையை கைவிடுமாறு வலியுறுத்தியும் அவர் கைவிடவில்லை. மேலும் உண்ணாநிலையை தொடர்ந்த நேரத்தில் 76 ஆம் நாள் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் பதினாறாம் நாள் உயிர் நீத்தார். இது மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியது.


அவரது வீர மரணத்திற்கு பிறகு அவரது கோரிக்கை இந்திய நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படும் கோரிக்கை நடைமுறைக்கு வரவில்லை. அதன் பிறகு 1967 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 18ஆம் நாள் அன்றைய முதலமைச்சர் அண்ணா இருந்த பொழுது பேரவைத் தலைவர் (சபாநாயகர்) சி.பா.ஆதித்தனார்அவரர்கள் சட்டமன்றத்தில் தமிழ்நாடு என பெயர் மாற்றம் குறித்து ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினார்.அதன்பிறகு இந்திய நாடாளுமன்றத்தில் 1968 ஆம் ஆண்டு நவம்பர் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு தான் 1968 டிசம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு என பெயர் மாற்றம் விழாவாக கொண்டாடப்பட்டது.