“பாமக தொண்டர்கள் ஒவ்வொருவரும் மன உளைச்சலில் இருக்கிறோம்”- எம்.எல்.எ.அருள்
பாமக தொண்டர்கள் அனைவரும் விரக்தியின் உச்சத்தில் உள்ளோம் என பாமக எம்.எல்.ஏ. அருள் பேட்டியளித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து, சென்னை பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டார். அதேசமயம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, தீரன் உள்ளிட்டோர் உடன் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை செய்தார்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக எம்எல்ஏ அருள், “பாமக தொண்டர்கள் ஒவ்வொருவரும் மன உளைச்சலில் இருக்கிறோம்.. விரக்தியின் உச்சத்தில் இருக்கிறோம். அரசியலே வேண்டாம் என்ற அளவிற்கு மன உளைச்சலில் உள்ளோம். கட்சிக்குள் நெருக்கடியான சூழல் நிலவுகிறது. மன உளைச்சலால் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன், என்னை ராஜினாமா செய்ய விடாமல் ராமதாஸ் தடுத்து விட்டார். அன்புமணி இடையிலான மோதல் முடிவுக்கு வராவிட்டால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன்” என்றார்.


