பாமக எம்.எல்.ஏ. அருளுக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..

 
பாமக எம்.எல்.ஏ. அருளுக்கு நெஞ்சுவலி..  மருத்துவமனையில் அனுமதி.. பாமக எம்.எல்.ஏ. அருளுக்கு நெஞ்சுவலி..  மருத்துவமனையில் அனுமதி..


பாமக எம்.எல்.ஏ. அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள்  திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காராணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  சபாநாயகர் அப்பாவுவை சந்திப்பதற்காக சென்னை வந்திருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.  இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சைக்குப் பின் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஓமந்தூரார் மருத்துவமனையில் படுக்கை வசதி இன்றி அவதியுறும் நோயாளிகள்! – ஆதாரத்துடன் பதிவிட்ட பா.ஜ.க தலைவர்

 அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை  சேலத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருந்த நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே கட்சிக்குள் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே  நிலவும் உட்கட்சி பூசலால் அதிருப்தியில் இருக்கும் கட்சியினருக்கு, எம்.எல்.ஏ. அருளுக்கு ஏற்பட்டுள்ள நெஞ்சுவலி கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.