இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி எம்.எல்.ஏ
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்இன்பம் பெருகி மகிழ்ச்சி பொங்க, குடும்பம் நலமுடன் வாழ உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்தத் தீபாவளி திருநாள் முதல் தீமைகள் நீங்கி நன்மைகள் பெருகி மனச்சோர்வு அகன்று மகிழ்ச்சி பொங்க உடல் ஆரோக்கியம் உற்சாகம் நிலைக்க தீப ஒளிபோல் ஒளிமயமான வாழ்வு மலர தித்திக்கும் தீபாவளியாய் செழிக்கட்டும். அன்பெனும் அருங்குணம் பெருக்கெடுத்து அறநெறி வாழ்வியல் பண்பாடு செழித்து மனிதநேயம் சகோதர நல்லிணக்கம் வளர்ந்து சேவை நாட்டுப்பற்று நிலைத்து பணி சிறக்க நன்மைகள் பெருகி பொருளாதாரம் உயர்ந்து அமைதியும் வளர்ச்சியும் ஓங்கட்டும்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்-ஜி.கே.மணி எம்.எல்.ஏ
— G.K.Mani (@PmkGkm) November 12, 2023
இன்பம் பெருகி மகிழ்ச்சி பொங்க
குடும்பம் நலமுடன் வாழ
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இந்தத் தீபாவளி திருநாள் முதல்
தீமைகள் நீங்கி நன்மைகள் பெருகி
மனச்சோர்வு அகன்று மகிழ்ச்சி பொங்க
உடல்… pic.twitter.com/KMx78MDs99
தரமான கல்வி வேலைவாய்ப்பு பெற்று இளைஞர்கள் பெண்கள் நலன் காக்க விவசாயிகள் நெசவாளர்கள் மீனவர்கள் மேம்பட ஆசிரியர் அரசு ஊழியர் தொழிலாளர் உரிமை பேணி எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் உறுதி செய்து வறுமையற்று நலமுடன் வாழும் நிலை வேண்டும். உங்கள் உழைப்பும் முயற்சியும் வெற்றிபெற்று எண்ணங்களும் கனவுகளும் நிறைவேறி நீங்களும் குடும்பத்தினர் அனைவரும் மனநிறைவுடன் மகிழ்ச்சியுடன் நலமுடன் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் . இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.