பாமக சிறப்பு பொதுக்குழு- அன்புமணிக்கு போட்டியாக மகளை களமிறக்கும் ராமதாஸ்!

 
ச் ச்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

ச்

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நிறுவனர் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 4,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இதில் பங்கேற்க வந்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ராமதாஸின் புகைப்படம் இடம்பெற்ற அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் ராமதாஸ் மகள் காந்திமதிக்கு பதவி வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாமக எதிர்காலம் குறித்து முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

பாமக பொதுக்குழு மேடையில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இருக்கைக்கு அருகில் அவரது மகள் காந்திமதிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்புமணியின் செயல் தலைவர் பதவியை பறித்து மகள் காந்திமதிக்கு வழங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.